இஸ்லாமிய முறைப்படி வழங்கப்பட்ட தண்டனை : வாழைச்சேனையில் ஆறு பேர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல் ஒன்றில், சட்டத்துக்கு முரணாக பெண் ஒருவருக்கும், ஆண் ஒருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்ததாக கூறி பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும், வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அழைத்து அங்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொடுக்கப்பட்ட தண்டனை
இதன்போது, பெண்ணுக்கு 50 கசையடியை ஒத்த தண்டனையும் ஆணுக்கு 100 கசையடியை ஒத்த தண்டனையும் பள்ளிவாசலில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் மற்றும் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த நடவடிக்கையுடன் தொடர்புபட்ட 6 பேரை வாழைச் சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |