திருகோணமலையில் மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணித்து பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (6) திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. ஏம். பாரிஸ் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, யுத்தம் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிக நீண்டகாலம் நிரந்தர வீடுகள் இன்றி கஷ்டம் அனுபவிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் 4ம் கட்டத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டன.
வீடுகள் கையளிப்பு
பெல்ஜிய நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனமான செலவிப் (SELAVIP) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக ஆறு பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் விளாங்குளம், இலுப்பைக்குளம், சல்லி மற்றும் ஆத்திமோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு குறித்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |