ஏறாவூர் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் இரு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Batticaloa
By Mayuri Aug 07, 2024 03:15 AM GMT

ஏறாவூர் - மிச்சிநகர் பகுதியில் உள்ள வீட்டில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஹங்வெல்லவில் ஒருவர் பலி

இதேவேளை நேற்று பிற்பகல் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஏறாவூர் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் இரு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை | Eravoor Murder.

உயிரிழந்தவர் வரகாபொல, நெவ்கல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW