சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sri Lanka Climate Change Eastern Province Kalmunai Floods In Sri Lanka
By Rakshana MA Dec 11, 2024 06:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திலுள்ள எகெட் வீட்டுத்திட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(10) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நிதி பங்களிப்புடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளரும் நலன்புரி அமைப்பின் தலைவருமான எம்.எம். ஆஷிக் தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

கற்றல் உபகரணங்கள்

நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக இக்குடும்பங்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட உடமைகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன.

இதனால் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைக்கு உடன் உதவும் முகமாக பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உள்ளிட்ட நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையை அடுத்து 100 பிள்ளைகளுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு | Providing Equipment To The Students

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மற்றும் பொலிவேரியன் மக்களுக்கு இரவு பகல் பாராது கடமையாற்றிய பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் இதன்போது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்

மேலும், இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். ரம்ஸான், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சீ.முஹம்மட், நிதி உதவியாளர் ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

#

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery