ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு எதிராக தடை உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தடை உத்தரவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுக்கும் வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றவேண்டுமெனவும், அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |