நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!

GMOA Sri Lanka Hospitals in Sri Lanka Doctors
By Rukshy Mar 23, 2025 02:53 AM GMT
Rukshy

Rukshy

தொழில் நிபுணர்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கால்நடை வைத்தியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

அரசின் மருத்துவ சேவைகள் 

பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்கள் 2,000 பேர், செவிலியர்கள் 4,000 பேர், பொறியியலாளர்கள் 2,000 பேர் தற்போது வெளிநாட்டுக்குச் செல்ல தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்! | Professionals Trying To Move Abroad  

மத்திய அரசின் மருத்துவ சேவைகள் மற்றும் மாகாண சபை மருத்துவமனைகளில் வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை மிக கடுமையாக ஏற்பட்டுள்ளதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகவே புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

அத்துடன், அரசாங்க கட்டுமான துறைகளிலும் பொறியியலாளர்கள் பற்றாக்குறை தீவிரமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 வைத்தியர்களும் செவிலியர்களும்.. 

இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவை தொலைதூர மற்றும் மிகுந்த பிரச்சினைகளைக் கொண்ட மாகாண சபை மருத்துவமனைகளாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்! | Professionals Trying To Move Abroad

இவற்றில் வைத்தியர்களும் செவிலியர்களும் கடுமையாக பற்றாக்குறையுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

3 நாள் ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி

3 நாள் ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி

இடைத்தேர்தல்கள் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

இடைத்தேர்தல்கள் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW