கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் வெளியான தகவல்
கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை, வெளிவிவகார அமைச்சில் நேற்று(06) இடம்பெற்ற இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையர்களுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் 7,50,000க்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கும் மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும்.
புதிய கடவுச்சீட்டு தாமதம்
மேலும், கடவுச்சீட்டுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டு சிலர் ஐந்து முதல் ஆறு மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சிலருக்கு கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலையும் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த சிக்கலானது புதிய நிறுவனம் ஒன்றிற்கு கடவுச்சீட்டு அச்சிடும் பணிகள் வழங்கப்பட்டதை அடுத்து தான் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானம்
இதன்படி கொள்கை ரீதியாக, கடந்த அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானமே இந்த நெருக்கடி நிலைக்குக் காரணமாகவும் காணப்படுகின்றது.
மேலும், இதேவேளை வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் காரணமாக கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான பொறுப்பை புதிய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |