அரிசி விற்பனையை நிறுத்தியுள்ள கொட்டகலை வியாபாரிகள்!

Sri Lankan Peoples Import Rice
By Rakshana MA Jan 06, 2025 07:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரிசி விற்பனையில் இருந்து விலகுவதாக கொட்டகலை ஐக்கிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொட்டகலையில்(Kottakala) நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாத் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்ய போதிய அளவு இருப்பு இல்லாததால், அரிசியை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கிலும் வடக்கிலும் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

கிழக்கிலும் வடக்கிலும் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

சங்கத்தின் தீ்ர்மானம் 

இதனிடையே, இன்னும் ஒரு வாரத்தில் தை பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய முடியாத வகையில், சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக பெட்டகோடு அரிசி மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே, தற்போதைய அரிசி தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 10ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அரிசி விற்பனையை நிறுத்தியுள்ள கொட்டகலை வியாபாரிகள்! | Traders Who Have Stopped Selling Rice 2025

இதன்படி, அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து 88,000 மெட்ரிக் தொன் அரிசி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த திருவிழா காலத்தைப் போலவே சந்தையில் உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரிசி விற்பனையில் இருந்து தமது தொழிற்சங்க வர்த்தகர்கள் விலகுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அரிசி லொறியில் கொண்டுவரப்பட்ட நாய்கள் : அதிரடியாக கைது செய்யபட்ட சாரதி

அரிசி லொறியில் கொண்டுவரப்பட்ட நாய்கள் : அதிரடியாக கைது செய்யபட்ட சாரதி

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை உடைந்து விழுந்த சம்பவம்! இரண்டாமவரும் பலி

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை உடைந்து விழுந்த சம்பவம்! இரண்டாமவரும் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW