விசேட சோதனை நடவடிக்கைகள் : குறைவடைந்துள்ள விபத்துக்கள்
இலங்கையில் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வாகனச்சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க(Budhdhika Manathunga) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறைவடைந்துள்ள விபத்துக்கள்
இது தொர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 2024 டிசம்பர் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக இருக்கின்றது.
மேலும், நாளொன்றுக்கு 4 முதல் 5 விபத்து சம்பவங்கள் வரை குறைந்துள்ளதுடன், கடுமையான காயங்களுடனான விபத்துக்கள் மற்றும் கடுமையான சேதத்துடனான விபத்துக்கள் அண்ணளவாக 8 தொடக்கம் 10 சம்பவங்களாக குறைவடைந்துள்ளது என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் விசேட சோதனை
அத்துடன், வாகனங்களின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் தமது வாகனங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத பாகங்களையும் அகற்றுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும், இந்த வாகன சோதனை நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் தடுக்க முற்பட்டாலும், இலங்கை பொலிஸ் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எனவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |