வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள்
வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் 774 விசேட சுற்றி வளைப்புககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் மாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார்.
அரிசி விற்பனை தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசி விலை மற்றும் பதுக்கல் தொடர்பில் கவனம் செலுத்தி 2024 ஆம் ஆண்டு அரிசி விற்பனை தொடர்பான வட மாகாணத்தில் 774 விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பு
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அரிசி தொடர்பில் 126 விசேட சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், வட மாகாணத்தில் பெரியளவிலான பதுக்கல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |