கொழும்பு இரத்தினக்கல் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனை
கொழும்பில் நடைபெறும் இரத்தினக்கற்கள் கண்காட்சியில் தற்போது 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சியானது வார இறுதி நாட்களில் கொழும்பு - உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
மேலும், இதன்போது குறித்த கண்காட்சியில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அதிகளவில் பங்குபற்றியிருந்தனர்.
100 கோடி ரூபாய் பரிவர்த்தனை
இதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொள்வனவாளர்கள் கலந்துகொண்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த கண்காட்சியின் போது, 20 கரட் ப்ளு சஃபையர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்படப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |