தங்கம் கடத்தல் : திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
Crime
By Rakshana MA
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான தங்க பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும் குறித்த சந்தேகநபரிடம் இருந்து 04 தங்க நெக்லஸ்கள் மற்றும் இரண்டு வளையல்கள் உள்ளிட்ட தங்கப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கண்டி - வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |