மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பணம் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு

President of Sri lanka Sri Lankan Schools Education Presidential Update
By Mayuri Aug 01, 2024 09:42 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (01) அவர்களின் வங்கிக் கணக்குகளி்ல் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் போது, புலமைப்பரிசில் பெறுபவர்கள் அனைவருக்கும் இது குறித்து குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும்.

வைப்புச் செய்யப்படும் தொகை

ஜனாதிபதி செயலகம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி செயலகம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

2022/2023 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 3000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 17ஆவது தவணையும், 2023/2024 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 06ஆம் தவணை உரிய கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பணம் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு | Presidential Fund Scholarships

அத்துடன், தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையின் 05 ஆவது தவணை, பிரிவெனா மற்றும் பிக்குனிமார்களுக்கும், பிரிவெனா (சாதாரண தரம்)/ க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்று, “பிராசீன” பரீட்சைகள் அல்லது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிக்கு மாணவர்கள் உட்பட 500 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 04 தவணைத் தொகையும் இன்று உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது

இலங்கையில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது

அத்துடன், பிரிவெனா கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மற்றும் பிக்குனிமார்கள் உட்பட தரம் 01 முதல் தரம் 11 வரையான 3000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 04 தவணைத் தொகையும் இன்று உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புலமைப்பரிசில் பெறுபவர்கள் அனைவருக்கும் 2024 ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையுடன் புலமைப்பரிசில் தவணைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW