ஜனாதிபதி செயலகம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
Presidential Secretariat of Sri Lanka
President of Sri lanka
By Mayuri
காசா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இனியும் அதற்காக நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக நிவாரணச் செயற்பாடு
2024 ஜூலை 31ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் ஜனாதிபதி செயலகத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதி சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |