இலங்கையில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது
Sri Lanka
Sri Lanka Police Investigation
China
Crime
By Laksi
விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் 6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று (31) களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 24, 27, 39, 48 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீன பிரஜைகள் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |