சஜித்தின் வெற்றியை சீர்குலைக்க கோட்டாவின் கையாட்கள் திட்டம்: ரிஷாட் பகிரங்கம்

Anura Dissanayake Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 09, 2024 07:24 AM GMT
Laksi

Laksi

சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பான ஆட்சியைக் கொண்டு வருவதற்காக நாம் ஒன்றுபட்டுள்ளபோது, கோட்டாவின் கூலிப்படைகள் நமது மக்களை கூறுபோடுவதற்கு களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, தோப்பூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நால்வருக்கே போட்டி. இதில், ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார். முதலாமிடத்திலுள்ள சஜித்தை முந்திச் செல்வதற்கு அனுர முயற்சிக்கிறார். இதை நாம் அனுமதிக்க இயலாது.

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு 

கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்பினை பெறுவது அவசியம். ஜனாஸாக்களை எரிக்கின்றபோது, பேசாமடந்தைகளாக இருந்த கோட்டாவின் கையாட்களே ரணிலின் அமைச்சரவையில் உள்ளனர்.

சஜித்தின் வெற்றியை சீர்குலைக்க கோட்டாவின் கையாட்கள் திட்டம்: ரிஷாட் பகிரங்கம் | Presidential Election Sajith Support Rishad

இதனால்தான், ரணிலை எதிர்க்கிறோம். இம்மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் இவை பற்றிச் சொல்லியுள்ளோம்.

செல்வநகரில் தண்ணீருக்கு பிரச்சினைகள் உள்ளன. தோப்பூர், குச்சவெளி உள்ளிட்ட திருகோணமலை மாவட்டக் கிராமங்களின் பிரச்சினைகள், சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் தீர்க்கப்படும்.

ஆகையால், எதிர்வரும், சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தேடுங்கள். எமது நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக, அனைவரும் ஒன்றுபட்டு சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW