ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா
வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தான் நாட்டுக்கு நன்மை கிடைக்கும், வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரே தலைவர் அவர் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹப்புத்தளையில் நேற்று (9) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ரணிலுக்கு மீண்டும் ஆட்சி
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சஜித் பிரேமதாசவால் அல்லது அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் இருவரும் பிரதமர்களாகக் கூட பதவி வகித்தவர்கள் இல்லை.
இன்று வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர். ஊவா மாகாண மக்களும் ஒருபோதும் நன்றிக்கடன் மறப்பவர்கள் அல்லர்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதி பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது தோட்ட மக்களின் தேவைகள் பலவற்றையும் தீர்த்து வைப்பார்.
இன்று பதுளை வைத்தியசாலை வசதிகளை மேம்படுத்தி தரவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். எனவே, அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |