வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியுமா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Mayuri Sep 09, 2024 03:34 AM GMT
Mayuri

Mayuri

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமாயின் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவும் தபால் திணைக்களமும் இணைந்து அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைத்தாலும் கிடைக்கப்பெறாவிட்டாலும் வாக்களிப்பதற்கு அது தடையாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள்

எப்படியிருப்பினும் அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியுமா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | Voter Card Is Not Necessary To Vote

வாக்களிப்பு நிலையம் எது என தெரிந்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டையின் மூலம் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்காளர் எண்ணை அறிந்து கொள்ள வழியமைக்கும் என்ற போதிலும் அட்டை கிடைக்கப் பெறாமை தேர்தலில் வாக்களிப்பதற்கு பாரதூரமான தடையாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW