எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம் : ரிஷாட் கோரிக்கை

Batticaloa Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 10, 2024 12:03 PM GMT
Laksi

Laksi

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏறாவூரில் பெண்கள் மாநாடு இடம்பெற்றுள்ளது.

இந்த மாநாடானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

சஜித்திற்கு ஆதரவு

இங்கு உரையாற்றிய அவர், நாளுக்கு நாள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இடங்களில் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு மக்கள் எங்களை சந்திக்கின்றனர்.

எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம் : ரிஷாட் கோரிக்கை | Presidential Election Rishad Speech In Eravur

சிறந்த ஆட்சியை சஜித் பிரேமதாசவால் தான் தர முடியும் என்ற நம்பிக்கை நாட்டின் நாலா திசைகளுக்கும் பரவி வருகிறது. வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எம்முடனே உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் சேவைகள் விசாலமானவை. ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடசாலைகளுக்கான பேருந்துகளை வழங்கி மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவித்தார்.

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

வாக்குறுதி

சுகாதார சேவைக்குள் அரசியல் தலையீடுகள் நுழைந்து, சேவையைச் சீரழித்தபோது, சொந்த நிதியில் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு உதவினார். பொய் பேசாத, வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்ற நேர்மையான அரசியல்வாதி சஜித்.

எல்லா மத மக்களும் விரும்பும் தலைவனை வெற்றி பெறச் செய்வோம் : ரிஷாட் கோரிக்கை | Presidential Election Rishad Speech In Eravur

எனவே, நம்பிக்கையோடு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்கள்" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் எம்.ஹமீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.அமீர், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 716 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery