இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் 80 முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரணில் விக்ரமசிங்கவின் பேச்சாளர்களாக செயற்பட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்கவின் உண்மைத் தன்மையை அவர்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவியைப் பெறுவது ஹக்கீமுக்குப் பிடிக்காது: நஸீர் அஹமட் விசனம்
80 எம்.பிக்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இழந்துவிட்டதாகவும், ஜனாதிபதியுடன் தொடர முடியாது என்பதை உணர்ந்து, தற்போது குறுக்கு வழியில் நிற்கின்றார்கள் என்றும், தமது செயற்பாடுகளுக்காக வருந்துகின்ற சிலர் உணர்ந்துள்ளனர்.
இவர்களில் சுமார் 80 பேர் ஏற்கனவே விசாவைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர் இல்லை என்பது தங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக செயற்படுவதற்கு மாத்திரமே ஜனாதிபதி அவர்களைப் பயன்படுத்துகின்றார் என்பதையும் குழு உணர்ந்துள்ளதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |