நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 11, 2024 09:07 AM GMT
Laksi

Laksi

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ஜனாதிபதி ரணிலுக்கு தான் அவமானம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் நடைபெற்ற வெல்லும் சஜித் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிதாக அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தவரின் கையில் நல்ல காசு உள்ளது. ஒரு பிரமுகர் மேடையில் பேச ஒரு பேச்சுக்கு 25,000/- வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வு அறிக்கை பெறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வு அறிக்கை பெறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

ஊழல்

இப்படியான ஊழலை பார்த்தால் யாருக்குத்தான் ஆத்திரம் வராமல் இருக்கும். பொத்துவில் மண்ணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்த பிரச்சார கூட்டத்திற்கு மருதமுனையில் இருந்தும் 15 பேருந்துகளில் ஆட்களை அழைத்து சென்றார்கள். அவர்கள் யாரும் சும்மா செல்லவில்லை. ஒவ்வொரு ஆளுக்கும் தலைக்கு 5000 ரூபாய் கொடுத்து இருக்கிறார். இது இலகுவான விடயம் அல்ல.

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி | Presidential Election Ranil H M M Harees

பல்வேறு இடங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 120 பேருந்துகள் பொத்துவிலுக்கு அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள ஆட்களை ஏற்றிச் சென்று இருக்கின்றன. கணக்கு பாருங்கள்.ஒரு பேருந்தில் 40-50 பேர் சென்றால் ஒருவருக்கு 5000 ரூபாய் படி மக்களுக்கு காசு, பேருந்துக்கு காசு. கிட்டத்தட்ட 120 பேருந்துக்கு 4 கோடி 20 இலட்சம்.

அப்படியானால் இந்த பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது. யார் யார் களவெடுத்திருக்கிறார்கள் அல்லது யார் யார் களவெடுக்க இல்லை என்று சிங்கள இளைஞர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனாலயே ரணில் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியையாக இருக்கும் ரணிலின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோருக்கு திட்டக்கூடாது என்று பல்கலைக்கழக மாணவர்கள், சிங்கள இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழிப்பு: நிஹால் தல்துவ சுட்டிக்காட்டு

சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழிப்பு: நிஹால் தல்துவ சுட்டிக்காட்டு

சஜித் வெற்றி

ரணில் நாட்டை எப்படி முன்னேற்றகரமான கொண்டு வந்தாலும் அவருடன் சுற்றி இருப்பவர்கள் கூடாது என்பதுதான் இப்போது நாட்டில் உள்ள தெளிவு.

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி | Presidential Election Ranil H M M Harees

பெட்ரோல் வரிசையில் இறந்த மக்களும் இருக்கிறார்கள். அப்போது நாட்டை பற்றி சிந்திக்காமல் உடனடி கொள்வனவு திட்டத்தின் கீழ் ஒரு கப்பலில் 1200 கோடி இலாபம் எடுத்தவனும் அரசில்அமைச்சராக இருக்கிறார்கள். ஒரு லட்சம் தொன் பெட்ரோல் வேண்டுமென்றால் ஒரு தொலைபேசி அழைப்பில் எடுப்பார்கள். அவர்கள் கூறும் விலை தான் கொள்வனவு விலையாக இருந்தது.

அந்த காலத்தில் அவசர நிலைமை காரணமாக கேள்வி மனுக்கள் இருக்கவில்லை. மற்ற அமைச்சர்கள், ஆளும் கட்சிக்காரர்கள் உழைப்பதை கண்டு நமது பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு ஆசை. நாமும் அமைச்சராக வேண்டும், உழைக்க வேண்டும் என்று.

இப்போது ரணிலை ஜனாதிபதியாக உருவாக்க துடிக்கிறார்கள். நாங்கள் அமைச்சர்களாக இருந்த எங்கள் காலத்தில் பதவிகளை அமானிதமாக பார்த்தோம். நாங்கள் எதிர்பார்க்கும் ஊழலில்லா இலங்கை உருவாகி எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்று ஊழலை ஒழிப்பார் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம்: ரிஷாட் பதியுதீன்

நாடாளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம்: ரிஷாட் பதியுதீன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW