நாடாளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம்: ரிஷாட் பதியுதீன்

Srilanka Muslim Congress Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka
By Laksi Sep 11, 2024 08:16 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம். அந்தளவுக்கு மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் நேற்று (10) மதியம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளில் இதுவரை களமிறங்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்

தேர்தல் நடவடிக்கைகளில் இதுவரை களமிறங்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்

மக்களின் ஆணை

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "எமது கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரும், தவிசாளர் ஒருவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம்: ரிஷாட் பதியுதீன் | Presidential Election Lets 10 Mps Rishad

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவுமே எமது கட்சி, மக்களின் ஆணையை கோரியது.

இதனால் சஜித் பிரேமதாசவுக்கு கணிசமான வாக்குகளை எமது கட்சி பெற்றுக்கொடுத்தது. நாடாளுமன்றத்தில் நான்கு எம்.பிக்களைப் பெறுமளவுக்கு எமது கட்சிக்கு மக்களின் ஆணை கிடைத்தது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பத்து எம்.பிக்கள்

இந்த ஆணையை மீறி, இந்த எம்.பிக்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். இவர்களைப் பின்தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் கட்சி மாறிவிட்டனர். மக்களின் ஆணைகளை மீறிய இவர்களை மன்னிக்கவே முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம்: ரிஷாட் பதியுதீன் | Presidential Election Lets 10 Mps Rishad

எதிர்வரும் காலங்களில் இவர்களை மீண்டும் எம்முடன் இணைக்கப் போவதில்லை. இவர்கள் சென்றதால் கட்சியின் வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம். அந்தளவுக்கு மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு! இறுதிக் கட்டடத்தை அடைந்த தபால் திணைக்களத்தின் பணிகள்

தபால் மூல வாக்களிப்பு! இறுதிக் கட்டடத்தை அடைந்த தபால் திணைக்களத்தின் பணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW