ஹட்டனில் ஜனாதிபதி ரணில் அளித்த உறுதிமொழி
நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் எனவும், அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள் இருக்கும் காணிகளின் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டு அந்தக் காணிகளை அரசாங்கம் மீள சுவீகரிக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் எனவும், வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உதவியளிக்கும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அவற்றுக்கு அண்மித்த பகுதிகளில் விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்களை உருவாக்கக்கூடிய காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட வர்த்தகர்களுடனான சந்திப்பு நேற்று (10) ஹட்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பூரண ஆதரவு
நுவரெலியா வர்த்தக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பல யோசனைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரியான வேலைத்திட்டத்துடன் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக அங்கு கூடியிருந்த நுவரெலியா மாவட்ட வர்த்தக சமூகத்தினர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |