பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்!

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka Palestine Gaza
By Rakshana MA Dec 01, 2024 07:09 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேற்கு ஆசியா உட்பட பலஸ்தீனம்(Palestine) ஆகிய நாடுகளில் ஓராண்டுக்கும் மேலாக தொடரும் யுத்த நிலைமையின் காரணமாக ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் தொடர்ச்சியான சேதங்களை  ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியில், பலஸ்தீன மக்களுக்கான இலங்கையின் ஆதரவினை மீண்டும் உறுதி செய்த ஜனாதிபதி, காசாவின் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை தொடர்ச்சியாக கடுமையான அதிருப்திகளை தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பையும் ஆதரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை

இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை

ஆதரவான இலங்கை...

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 

பலஸ்தீன மக்களின் போராட்டம், சர்வதேச சட்டம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட அமைதியான மற்றும் சமத்துவமான தீர்மானத்தை பின்தொடர்வதில் இருந்து உலகம் பின்வாங்கக் கூடாது என்பதை நினைவூட்டுகின்றது.

இந்த நெருக்கடியான தருணத்தில் ஒருமித்த தீர்மானத்தை எட்டுவதற்கு சர்வதேச சமூகப்பிளவுகளை ஒதுக்கி, பகைமையை மேலும் அதிகரிப்பிற்கு வழிவகுக்காமல் தடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்! | President Anura Condemns Atrocities In Gaza

இந்த சவாலான காலகட்டத்திலும், 1967 ஆம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகளின் தீர்வு தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இலங்கை தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுனாமி அனர்த்தம் குறித்து பரவும் தகவல்கள்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

சுனாமி அனர்த்தம் குறித்து பரவும் தகவல்கள்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

சியோனிச கொள்கை

பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவானது கடந்த வெள்ளிக்கிழமை லக்ச்மன் கதிர்காமர் நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் போதே ஜனாதிபதியின் செய்தி வாசிக்கப்பட்டது.

இதில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது வரவேற்பு உரையில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் சியோனிச விரிவாக்கக் கொள்கைகளைக் கண்டித்தார்.

பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்! | President Anura Condemns Atrocities In Gaza

மேலும் இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் பலஸ்தீன பொறுப்பதிகாரி ஹிசாம் அபுதாஹா ஆகியோர் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW