சுனாமி அனர்த்தம் குறித்து பரவும் தகவல்கள்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Tsunami Batticaloa Sri Lanka Climate Change Eastern Province
By Laksi Nov 30, 2024 06:31 PM GMT
Laksi

Laksi

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்பி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி மற்றும் ஆரையம்பதி பகுதியில் கடல்நீர் உள்வாங்கப்பட்டதாகவும் கிணற்றுநீர் வற்றியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு அப்பகுதியிலிருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு

போலியான தகவல்

எனினும், இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது இது முற்றிலும் போலியான தகவல் எனவும் மக்கள் இயல்பாக அப்பகுதியில் வசிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சுனாமி அனர்த்தம் குறித்து பரவும் தகவல்கள்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Important Notice To People Tsunami Affected Batti

மேலும், சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW