இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Fuel Price In World
By Laksi Nov 30, 2024 02:08 PM GMT
Laksi

Laksi

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

புதிய விலை

அதேநேரம் மண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்:வெளியான அறிவிப்பு | Revision In Fuel Prices In Sri Lanka

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW