இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்
நவீனமயப்படுத்தப்பட்ட உலகில் பல்வேறு துறைகளில் பல நாடுகளும் பல சாதனைகளை பதிவிட்டு வரும் நிலையில் இலங்கையும் தற்போது சாதனை தடத்தில் கால் பதித்துள்ளது.
இதனடிப்படையில், தற்போது வாகனத் துறையில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சியின் விளைவாக இலங்கையில் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான மோட்டார் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது உலகம், பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்து வருகின்றது.
இந்த நிலையில் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் வாகனம் ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியிலும் பயனுள்ள முயற்சியானது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |