காலநிலை சீராகியும் ஆபத்திலுள்ள வடமாகாணம்!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் இன்று(30) குறைய ஆரம்பித்த போதிலும் வட மாகாணம் உட்பட சில பகுதிகள் இன்னும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 24 மாவட்டங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து நீடிக்கும் பகுதிகள்
எவ்வாறாயினும், பொலன்னறுவை மாவட்டத்தின் மானம்பிட்டிய, கண்டி பேராதனை, ஹொரவ்பொத்தானை, தந்திரிமலை மற்றும் மொரகவெவ பிரதேசங்களில் இன்னும் அபாயங்கள் நீடிக்கின்றன.
தொடர்ந்தும் பதுளை, கண்டி, கொழும்பு, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது. மேலும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |