முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Egg
By Laksi Jul 24, 2024 06:42 AM GMT
Laksi

Laksi

முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

முட்டை விலை

மேலும் கருத்து தெரிவிக்கையில்,  "முட்டை 6 ரூபாயாக விலை குறைந்துள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கைகளையும் பெற்று வருகின்றேன்.அத்தோடு தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம்.

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல் | Possibility Of Reduction In Egg Prices In Sl

40 ரூபாய்க்கு கூட முட்டை விற்பனை செய்ய முடியாவிட்டால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

கேக் தயாரிப்பாளர்கள்

ஏனெனில் பண்டிகை காலம் டிசம்பரில் தொடங்கும். கேக் தயாரிப்பாளர்கள் அதிக முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.இவர்களுக்கு தேவையான முட்டைகள் இல்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்ய வேண்டும்.

முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல் | Possibility Of Reduction In Egg Prices In Sl

இல்லையெனில், முறையான விலையில் முட்டைகளை வழங்கி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும்'' என்றும் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW