கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்“அடுத்த வருடத்திற்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
மதிய உணவு
அதேவேளை, பிரதான நிலை தேசிய பாடசாலைகளை தவிர மற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
மேலும், 2700 உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் பலகைகளை பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முழு பாடசாலை வலையமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது அரசின் திட்டமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இன்று (23) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |