மட்டக்களப்பில் கஜமுத்துடன் பொலிஸ் அதிகாரி கைது

Sri Lanka Police Ampara Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA May 22, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பில் பல இலச்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (21) மட்டக்களப்பு - ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

18 கஜமுத்துக்களுடன் கைது

இதையடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலேசாசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலாக குழுவினர் சம்பவதினமான நேற்று காலை 11.00 மணியளவில் ஏறாவூர் பிரதேசத்தில் வீதி ஒன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கஜமுத்துடன் பொலிஸ் அதிகாரி கைது | Police Officer Arrested With Kajamuthu

இதன் போது குறித்த நபர் தடைசெய்யப்பட்ட யானை தந்தத்தின் பாகமான நான்கு கஜமுத்துக்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மாறு வேடத்தில் இருந்த பொலிஸார் சுற்றிவளைத்து அவரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கஜமுத்துக்களை விற்பனை செய்த அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 57 வயதுடைய கட்டட ஒப்பந்தகாரர் ஒருவரை 18 கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் வைத்து மாலை 5.00 மணிக்கு கைது செய்துள்ளனர்.

மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கட்டடம்

மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கட்டடம்

தொடரும் விசாரணைகள் 

இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூரைச்சேர்ந்த 57 வயதுடையவர் எனவும் இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கஜமுத்துடன் பொலிஸ் அதிகாரி கைது | Police Officer Arrested With Kajamuthu

இவர்கள் இருவரையும் தொடர்ந்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணை பிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

வரலாற்று சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

இலங்கையின் இரண்டாவது மின்சார கட்டண திருத்தம்!

இலங்கையின் இரண்டாவது மின்சார கட்டண திருத்தம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW