ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

ISIS ISIS Terrorist World
By Rakshana MA May 22, 2025 05:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 298 பேரை துருக்கிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விடயம் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தினால் நேற்று (21) வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக, அங்காரா, இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உட்பட 47 மாகாணங்களில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இரண்டாவது மின்சார கட்டண திருத்தம்!

இலங்கையின் இரண்டாவது மின்சார கட்டண திருத்தம்!

பயங்கரவாத அமைப்பு

சந்தேககத்துக்குரியவர்கள், ஐஎஸ்ஐஎஸ்_க்கு நிதியளித்தல் மற்றும் அதன் சார்பாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட்ட தீவிரமான பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | 298 Isis Members Arrested

இந்த கைது நடவடிக்கைகளின் போது, பல உரிமம் பெறாத கைத்துப்பாக்கிகள் உட்பட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டில் துருக்கியின் அரசு, அதிகாரப்பூர்வமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை, ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.  

கல்முனையில் டெங்கு தடுப்பு பரிசோதனை முன்னெடுப்பு

கல்முனையில் டெங்கு தடுப்பு பரிசோதனை முன்னெடுப்பு

இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

இம்மாதம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW