நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டம்: பிரதமர் ஹரிணி எடுத்துரைப்பு

Jaffna Matara Sri Lanka Eastern Province Harini Amarasuriya
By Laksi Oct 25, 2024 01:20 PM GMT
Laksi

Laksi

தற்போதைய அரசாங்கம் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தெளிவான பார்வையை கொண்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசாங்க சேவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

டிஜிட்டல் பொருளாதாரம்

பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கை நாட்டுக்கு தேவை.

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டம்: பிரதமர் ஹரிணி எடுத்துரைப்பு | Plan To Digitize Sri Lanka Harini Amarasuriya

இதன்படி யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயங்களை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

பெண்களின் பங்களிப்பு

சர்வதேச டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் உள்நாட்டு தகவல் தொடர்பு கண்டுபிடிப்பாளர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்துவதும் அவசியம்.

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டம்: பிரதமர் ஹரிணி எடுத்துரைப்பு | Plan To Digitize Sri Lanka Harini Amarasuriya

டிஜிட்டல் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW