கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்

Trincomalee Switzerland Eastern Province
By Laksi Oct 25, 2024 10:53 AM GMT
Laksi

Laksi

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (24) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கையின் சுவிஸ் முதன்மைச் செயலாளர் முதலில் புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு சுவிஸ் அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் நிலைக்கப்போவதில்லை : ரிஷாட் பகிரங்கம்

சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை 

சுவிஸ் அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனும், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தை பாராட்டுவதாகவும்,  அநுரகுமார திஸாநாயக்க கூறியது போல், ஒரு சிங்கள, தமிழ் அல்லது முஸ்லிம் பிரஜை என்று கூறாமல் அனைவரும் இலங்கைப் பிரஜையாகக் காட்டிக் கொள்ளும் ஒரு நாட்டை உருவாக்கும் நோக்கத்திற்கு மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் | Justine Boillat Meet For Eastern Governor

சுவிட்சர்லாந்தின் முதன்மைச் செயலாளர், எதிர்காலப் பணிகள் குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்த வேளை ஆளுநர், மத்திய அரசுடன் இணைந்து தேசிய திட்டத்தின் மூலம் எதிர்காலப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதால், கல்வி, சுகாதாரம், சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

மக்களின் தேவை

இந்த நிலையில், கிழக்கு மாகாணம் மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் | Justine Boillat Meet For Eastern Governor

சிங்களம், தமிழ், முஸ்லிம் என கலப்பு இனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில், மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளைக் காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அனைவரும் இலங்கைப் பிரஜையாக கிழக்கு மாகாணத்தில் வாழும் நிலையை உருவாக்கி தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக செயற்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW