களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பிள்ளையான்

Batticaloa Pillayan Eastern Province Law and Order
By Laksi Jan 10, 2025 07:21 AM GMT
Laksi

Laksi

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று (10.01.2025) களுவாஞ்சிக்குடி (Kaluwanchikudy) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் சி.சந்திரகாந்தன் பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

நீதிமன்றத்தில் முன்னிலை

காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின் போது அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பிள்ளையான் | Pillayan Appeared In Kaluwanchikudy Court Today

இதனையடுத்து , காணி ஆணையாளர் தொடுத்த வழக்கிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி

சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW