சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி

Bandaranaike International Airport Colombo Easter Attack Sri Lanka Srilanka Bus
By Laksi Jan 10, 2025 06:08 AM GMT
Laksi

Laksi

சொகுசுப் பேருந்துகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு விமான நிலையமும் அதன் நிறுவனமும் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி,பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்படும் முனையத்தை வந்தடைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

இன வன்முறையை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை: பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

பேருந்து சேவை

இதனால் கோட்டை – கட்டுநாயக்க பேருந்து ஏறக்குறைய 6 வருடங்களின் பின்னர் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி | Buses Are Allowed To Go To The Katunayake Airport

ஆனால், இந்த பேருந்துகள் விமான நிலையத்திற்குள் தங்கி இந்த பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை.

2019 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பேருந்து சேவை இது வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

நாடாளுமன்ற ஒன்றியத்தின் துணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு

பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

பாசிக்குடா கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW