அம்பாறையில் நடைபெற்ற மக்கள் தினம்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் அம்பாறையில் மக்கள் தினம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று06) இடம்பெற்றுள்ளது.
பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறை
மேலும், இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரிகளிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட அதேவேளை, ஆளுநர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அத்துடன், அம்பாறை மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/9628fb87-2c7c-46f7-979a-327ff6b5141e/25-67a5893b0f0ed.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/45e0164e-245c-4424-b23f-729a938fddfb/25-67a5893b8cf74.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3d78bdbb-8ad7-420e-90b1-091209ae5cb2/25-67a5893c2aa31.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/744e949e-3e5d-4f00-83a5-c1decaf67fea/25-67a5893cb27c0.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/70e5c054-0f6f-4c52-b356-bf6e72f2a3c0/25-67a5893d45e62.webp)