சுகாதார நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த விசேட செயலமர்வு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் தொடர்பான செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது, பிராந்திய பணிமனையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிரின் ஒருங்கிணைப்பில் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீனின் தலைமையில் இடம்பெற்றது.
தீர்க்கப்பட்ட தேவைகள்
காலதாமதங்களைக் கண்டறிதல், செயல்திறனை மேம்படுத்துதல், விரயத்தை குறைத்தல், முறையான மேற்பார்வையை உறுதி செய்தல், எதிர்காலத் திட்டமிடல் நடவடிக்கைகளின் நிர்வாகத்தை மேம்படுத்துதல் போன்ற பொதுப் பிரச்சினைகளைப் பற்றி இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் சில வைத்தியசாலைகளுக்கு அலுவலக இலத்திரனியல் உபகரணங்களும் பிராந்திய பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இந்த செயலமர்வில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், பிராந்திய பிரிவு தலைவர்கள், பிரதேச வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






