ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது போலியான வாக்குகள் செலுத்தி அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிந்தக குலரத்ன கருத்து தெரிவிக்கையில்,
தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்
இந்த குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர், 7 ஆண்டுகளுக்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாமல் இருக்கவும், தேர்தலில் வாக்களிக்கத் தகுதியற்றவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்தில் 2023 இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |