க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Laksi Sep 14, 2024 08:57 AM GMT
Laksi

Laksi

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும்  என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் என்பனவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை இன்று (14) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளாார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதிய பாடசாலை தவணை

கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் வருடத்திற்கான பாடசாலை தவணை ஜனவரி 02ம் திகதி ஆரம்பமாகிறது. ஆனால் மூன்றாவது தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இரண்டு வாரங்கள் பாடசாலைகளை நடத்த வேண்டியுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | G C E O L Exam 2023 Result

அதன்படி, 2025 ஜனவரி 20 ஆம் திகதி முதலாவது பாடசாலை தவணையின் முதல் நாள் ஆரம்பமாகிறது. அதற்குள் சீருடைகள், பாடப்புத்தகங்கள் எல்லாம் தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பணி இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பணி இடைநிறுத்தம்

பரீட்சை

அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன. இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | G C E O L Exam 2023 Result

மாதக்கணக்கில், வருடங்களில் பிற்போடப்பட்ட உயர்தரப் பரீட்சை இந்த வருடத்திலேயே நவம்பர் 25-ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் வருடத்தின் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் ஆகியவை தாமதமின்றி ஒன்றாகச் செயல்படுத்தப்படும் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு விசா இன்றி தடுமாறும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு விசா இன்றி தடுமாறும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW