நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது
நாடாளுமன்றத்தின் ஜனவரி மாத இரண்டாம் அமர்வு இன்று (21) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
காலை 9.30 மணி தொடக்கம் 10.00 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 1 தொடக்கம் 6 வரையான சரத்துகளின் பிரகாரம் நாடாளுமன்ற செயற்பாடுகள் நடைபெறவுள்ளன.
க்ளீன் ஶ்ரீலங்கா
அதன் பின்னர் 10.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை வாய்மூல வினாக்களுக்கான பதில்களை வழங்கவும், 11.00 தொடக்கம் 11.30 வரை நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் தொடுக்கப்படும் வினாக்களுக்கான பதில்களை வழங்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11.30 தொடக்கம் பிற்பகல் 5.30 வரை அரசாங்கத்தின் "க்ளீன் ஶ்ரீலங்கா" செயற்திட்டம் குறித்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் சபை ஒத்திவைப்பு பிரேரணை இடம்பெற்று நாளை வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும்.
எதிர்வரும் 24ம் திகதி வரை சபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |