சீரற்ற காலநிலை : அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka
By Rakshana MA Jan 20, 2025 12:20 PM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை(Ampara) மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 5 வான் கதவுகளையும் தலா 6 அங்குலம் வீதம் திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திறப்புகளை 12 அங்குலமாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

மக்களுக்கான எச்சரிக்கை 

சேனநாயக்க சமுத்திரத்தைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை : அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Opening Of The Floodgates Of Senanayaka Samudra

மேலும், அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் மழை அதிகரித்த காரணத்தினால் வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், இந்த இடத்தில் கடந்த வருடம் வெள்ளநீர் அதிகரித்ததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டிருந்தனர்.

இந்த காலப்பகுதியில் காரைதீவு தொடக்கம் மாவடிப்பள்ளி புதிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் கடந்த காலங்களில் அவலங்களை எதிர் கொண்டதுடன் மரணங்களும் ஏற்பட்டவையும் அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

இந்த நிலையில், மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமன்றி பாம்பு, முதலை, ஆமை போன்ற ஆபத்தான உயிரினங்களின் தொல்லைகளாலும் மக்கள் அல்லல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது: ஜனாதிபதி அநுர

மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது: ஜனாதிபதி அநுர

பாதுகாப்பு கடமையில் அதிகாரிகள் 

குறிப்பாக மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கொட்டும் மழையிலும் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை : அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Opening Of The Floodgates Of Senanayaka Samudra

அத்துடன், தாழ்நிலங்களில் வசிக்கின்ற பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல் விடுத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமாகியிருந்தனர்.

மேலும் வடக்கு, கிழக்கு வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

மட்டக்களப்பு நகர் வாவியில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகர் வாவியில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery