மட்டக்களப்பு நகர் வாவியில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Rakshana MA
மட்டக்களப்பிலுள்ள(Batticaloa) குளம் ஒன்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(18) காலை 10.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலமானது அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று கரையடைந்த நிலையில் இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அடையாளம் காணப்படாத சடலம்
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.
அத்துடன், சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |