பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

Srilanka Muslim Congress Rauf Hakeem General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 02, 2024 07:16 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (1) இரவு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் எங்களுடைய கட்சியினர் தனித்து கேட்பதற்கும் அதேநேரம் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து கேட்பதான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருக்கிறோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

ஆயத்த நடவடிக்கைகள்

மேலும், புத்தளம் மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த ஒரு கலந்துரையாடலை நாங்கள் நடாத்தி இருக்கிறோம். இதிலே மூன்று விவகாரங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல் | Parliament Election In Muslim Congress Discussion

குறிப்பாக இன்று பரவலாக புத்தளத்தில் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாததன் காரணமாக கடந்த முறை எல்லா அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிட்ட காரணத்தினால் ஒரு உறுப்பினரை பெறுகின்ற வாய்ப்பு இருந்ததை அடிப்படையாக வைத்து அதே முறையில் மீண்டும் ஒரு முயற்சி செய்யப்பட வேண்டும் என்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

உறுதியான தீர்மானம்

இது குறித்த அமைப்பினரோடு சந்திப்பதற்கு நாங்கள் வரவேண்டும் என்பதற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதுகுறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். எனவே, இந்த சந்திப்பை நடாத்துவதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல் | Parliament Election In Muslim Congress Discussion

அதே நேரம் எங்களுடைய கட்சியினர் தனித்து கேட்பதற்கும் அதே நேரம் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து கேட்பதான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருக்கிறோம் சில நாட்களில் உறுதியான தீர்மானங்களை நாங்கள் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம்

சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW