பலஸ்தீனில் பிறந்த குழந்தைக்கு "சிங்கப்பூர்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காசாவில் பிறந்த பாலஸ்தீன குழந்தைக்கு, அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை சிங்கப்பூர் என பெயர் சூட்டி சிங்கப்பூர் நாட்டை கௌரவித்துள்ளனர்.
சிங்கப்பூர் ஆர்வலர் கில்பர்ட் கோ தலைமையிலான மனிதாபிமான அமைப்பான லவ் எய்ட் சிங்கப்பூர் அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
பஞ்சத்தின் மத்தியில், மனைவி கர்ப்பமாக இருந்த போது சிங்கப்பூர் சமையல் கூடத்தில் தொடர்ந்து உணவு உட்கொண்டதனை நன்றியுடன் நினைவு கூற இவ்வாறு பெயரிட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
பிரகாசமான புதிய உலகம் விரைவில் அவளை வரவேற்கும்
மேலும், அவர் தெரிவிக்கையில், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் அவர்களை மிகவும் நேசிப்பதால் அவளுக்கு சிங்கப்பூர் என்று பெயரிட விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
அத்துடன், குழந்தை பிறக்கும் போது ஆரோக்கியமாகவும் 2.7 கிலோ எடை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், லவ் எய்ட் சிங்கப்பூர் அமைப்பானது அந்தப் பதிவில், புதிதாகப் பிறந்த சிறுமிக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்தியதுடன் , நிரந்தர போர்நிறுத்தத்திற்கான வாய்ப்புடன் கூடிய "பிரகாசமான புதிய உலகம்" விரைவில் அவளை வரவேற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தது.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |