மீண்டும் திறக்கப்பட்ட காசாவின் சயீத் அல்-ஹாஷிம் பள்ளிவாசல்
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Faarika Faizal
காசாவின் சயீத் அல்-ஹாஷிம் பள்ளிவாசல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேற்று(17.10.2025) திறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போரின் காரணமாக இரண்டு வருடமாக திறக்கப்படாமல் இருந்த காசாவின் பல நூற்றாண்டுகள் பழமையான சயீத் அல்-ஹாஷிம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்காக மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
அத்துடன், இரண்டு வருடத்திற்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டு மீண்டும் பள்ளிவாசல் திறக்கப்பட்டு அதில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடியமைக்காவும், அங்கு தொழுகை நடத்தியமைக்கவும் காசா மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |