தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் விடுத்த கோரிக்கை

Benjamin Netanyahu Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 20, 2025 09:50 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

தெற்கு காசா மீது இஸ்ரேல், இன்று சுமார் 20 விமானங்கள் மூலம் வான்வெளி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் பல காசா மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களான நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி தலைமையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு இரு வாரங்களான நிலையில் மீண்டும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹமாஸ் ஆயுதங்களை விட்டு முழுமையாக விலக வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை

ஹமாஸ் ஆயுதங்களை விட்டு முழுமையாக விலக வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேல், ரபா எல்லையை முழுமையாக திறக்கவில்லை 

மேலும், அமைதி ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக இரு தரப்பினரும் தங்களிடமிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.

தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் விடுத்த கோரிக்கை | Israel Hamas War

அதன்படி ஹமாஸ் தங்களிடம் இருந்த பணயக்கைதிகளை விடுவித்தாலும் இஸ்ரேல், ரபா எல்லையை முழுமையாக திறக்கவில்லை.

அவ்வப்போது ஒருசில  லொறிகள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஹமாஸ் ஆயுதங்களை விட்டு முழுமையாக விலக வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை

ஹமாஸ் ஆயுதங்களை விட்டு முழுமையாக விலக வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை

தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் 

இந்நிலையில், "ஹமாஸ் அமைப்பானது பாலஸ்தீன பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அப்படி தாக்குதல் நடத்தினால் நாங்கள் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும்." என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் விடுத்த கோரிக்கை | Israel Hamas War

இவ்வாறு, அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து, "இன்னும் யுத்தம் முடியவில்லை. தேவைப்பட்டால் நாங்கள் மீண்டும் தாக்குதல்களை நடத்துவோம்.  ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கை விட வேண்டும் என பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸை எச்சரித்தார்.

இந்நிலையில், இன்றைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காசாவிற்குள் மனிதாபிமான உதவி லாரிகளுக்கு பதிலாக வணிக லாரிகள்

காசாவிற்குள் மனிதாபிமான உதவி லாரிகளுக்கு பதிலாக வணிக லாரிகள்

ஹமாஸ் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை 

இது குறித்து ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கையில், ஹமாஸ் ஒருபோதும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.

தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் விடுத்த கோரிக்கை | Israel Hamas War

சமீபத்தில் ஹமாஸ் அமைப்பினரால் பொதுவெளியில் கொல்லப்பட்டவர்கள் பாலஸ்தீன பொதுமக்கள் அல்ல. அவர்கள் இஸ்ரேலிடம் பணத்தையும், ஆயுதங்களையும் பெற்று பாலஸ்தீன பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலிய கைக்கூலிகள் என அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்திருந்தது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்   

இந்நிலையில், இஸ்ரேலின் இன்றைய தாக்குதலுக்கு இதுவரை ஹமாஸ் பதில் தாக்குதல்கள் எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் விடுத்த கோரிக்கை | Israel Hamas War

அத்துடன், போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இஸ்ரேலின் குறித்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கபட வேண்டும்.

அந்நிலையில், போர்நிறுத்தத்திற்கான மத்தியஸ்தர்கள் உடனடியாக இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஹமாஸ் கோரியுள்ளது.  

மீண்டும் திறக்கப்பட்ட காசாவின் சயீத் அல்-ஹாஷிம் பள்ளிவாசல்

மீண்டும் திறக்கப்பட்ட காசாவின் சயீத் அல்-ஹாஷிம் பள்ளிவாசல்

காசா அமைதித் திட்டத்தை மேற்பார்வையிட டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் விஜயம்

காசா அமைதித் திட்டத்தை மேற்பார்வையிட டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் விஜயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW