காஸா மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பாராட்டிய பலஸ்தீன ஆணையம்!
காஸா மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பலஸ்தீன தேசிய ஆணையம் பாராட்டியுள்ளது.
இது தொடர்பில் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க திட்டம், காஸா பகுதியில் நிரந்தர மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை நிறுவுதலை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான ஒத்துழைப்பு
அதுமட்டுமன்றி, மனிதாபிமான உதவிகளைத் தடையின்றி வழங்குதல் மற்றும் பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சுதந்திர அரசை நிறுவுதல் ஆகியவற்றையும் அமெரிக்க திட்டம்,உறுதிப்படுத்துகிறது என்று பலஸ்தீன தேசிய ஆணையம் கூறியுள்ளது.

காஸா பகுதி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பலஸ்தீன மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்தத் தீர்மானத்தை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக டிரம்ப் நிர்வாகம் மற்றும் ஐ.நா.வுடன் முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.