இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்
பாகிஸ்தானின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (14) உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் யுல் அசீஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, உயர்ஸ்தானிகர் சுதந்திர தின கேக் வெட்டி குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இலங்கைக்கு ஒத்துழைப்பு
இந்தநிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி, மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்களது சுதந்திர தின செய்திகளும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் செயலாளரினால் வாசிக்கப்பட்டது.
அத்தோடு, இலங்கை பாகிஸ்தான் நட்புரவுகள் மற்றும் பொருளாதார, பௌத்த,கலாச்சார மற்றும் பாதுகாப்பு கல்வி,சுகாதார விடயங்களில் பாகிஸ்தான் கடந்த 77 வருட காலமாக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கியவைகள் பற்றியும் உயர்ஸ்தானிகரால் உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வின்போது, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஊழியர்களும் . இலங்கை வாழ் பாகிஸ்தானியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |