சிறந்த எதிர்க்கட்சியை உருவாக்குவதே எமது இலக்கு : திலித் ஜயவீர
உன்னதமான எதிர்க்கட்சியொன்றை உருவாக்கினால், அரசாங்கத்தை விட அதிகமான பணிகளைச் செய்ய முடியும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கட்சி சார்பில் பதக்கம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தைரியமான எதிர்க்கட்சி என்றென்றும் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள பௌத்த நாகரிகம்
கட்சி ஒன்றுக்கு எதிராக வழக்குகள் இருந்தால், படுக்கைக்கு அடியில் பொருட்களை மறைத்து வைத்தால்,இரகசியக் கணக்குகள் இருந்தால்,அது கோழைத்தனமான எதிர்க்கட்சியாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் தேசியவாதம் பற்றி பேசுகிறோம், இனவாதம் பற்றி அல்ல. இலங்கையின் தேசியவாதம் சிங்கள பௌத்த நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூற பலர் பயப்படுகிறார்கள்.
இப்படிச் சொன்னால் மக்கள் கோபப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள். எனினும் அரசியல்வாதிகள் தேசியவாதத்தின் இனவாத பகுதியை தெரிவு செய்து அரசியலில் ஈடுபடுவதே பிரச்சினையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தெற்கில் மாத்திரமல்ல, வடக்கிலும் கூட இடம்பெறுகிறது. இந்த விடயத்தில் அதற்கு எதிராகவே தாம் செயற்படுவதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |